*திண்டுக்கல்லில் 6⃣ வது புத்தக திருவிழா*
_நவம்பர் 30 முதல் டிசம்பர் 10 வரை_
*நூல் அறிமுகம்:* 3⃣4⃣
*நூலின் பெயர்:* நாவல் கோட்பாடு
*நூல் ஆசிரியர் :* ஜெயமோகன்
*இதை ஒரு திறனாய்வு நூலாகவும் கொள்ளலாம் ; நாவல்கள் குறித்த ஒரு ஆய்வறிக்கை எனவும் கொள்ளலாம்..*
*ஜெயமோகன் தமிழகத்தின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர்..*
*நாவல்கள் குறித்து இவர் வெளியிட்ட கருத்துக்கள் இலக்கிய உலகில் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்த அதை தொடர்ந்து இவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்...*
*10 தலைப்புகளில் நாவல் தொடர்பான கோட்பாடுகளை வரையறுக்கிறார் ஜெயமோகன்...*
*இந்த நூலில்,*
*நாவல் என்றால் என்ன ? என்பதை ஆசிரியர் அவரின் கண்ணோட்டத்தில் விளக்குகிறார்..*
*கதை - சிறுகதை - நெடுங்கதை - நீள் கதை - நாவல் இவற்றிற்கு இடையே உள்ள உறவுகள் , வேறுபாடுகளை தகுந்த படைப்புகள் மூலம் விளக்குகிறார் ஜெயமோகன்..*
*இவற்றிற்கான வரையரைகளை விளக்கும்போது உலக அளவில் புகழ்பெற்ற நாவல்கள், இந்திய நாவல்கள், தமிழக நாவல்கள் என பல படைப்புகள் உங்களுக்கு அறிமுகமாகும்..*
*நீங்கள் மிகச்சிறந்த நாவல்கள் என நினைத்துக் கொண்டிருக்கும் நாவல்களை ஜெயமோகன் விமரிசிக்கும்போது உங்களுக்கு அதிர்ச்சியாக கூட இருக்கலாம்..*
*தமிழில் எழுதப்பட்ட நாவல்கள் என சொல்லப்படுபவை உண்மையிலேயே நாவல்கள் தானா என நமக்கே சந்தேகம் தோன்றுகிறது இந்த நூலை வாசிக்கும்போது...*
*தமிழில் உள்ள நாவல் இலக்கியத்தை அலசும்போது இவரின் வரையறைக்குள் சிக்குவது விரல்விட்டு எண்ணக்கூடிய படைப்புகளே..*
*தமிழின் நாவல் படைப்பில் உள்ள நாவல் முயற்சிகளையும் பட்டியலிட்டுள்ளார்..*
*வாசியுங்கள் !*
*உங்கள் வாசக ரசனையை உரு அங்குலமாவது உயர்த்தும்..*
*பக்கம்:*144
*விலை:* ரூ 100
*வெளியீடு:* கிழக்கு பதிப்பகம்
_வாசிப்பை சுவாசமாக்குவோம்_
நம்பிக்கையுடன்
ஸ்ரீதர்
திண்டுக்கல் 🦋
No comments:
Post a Comment