Sunday 22 October 2017

படித்தது

பாரத்பாரதி

*அறிதல் அறிவித்தல்*

💥சந்தோஷத்தை முகம் முழுக்கப்
பரத்திக்கொண்டு
கண்கள் ஒளிமின்ன –
முகமன் கூறாதீர் எனக்கு

💥தூரத்தே நான் வரும்போதே
கைகள் உயர்த்தி
உற்சாகமாய் ஆர்ப்பரிக்காதீர் –
வரவேற்கும் விதமாக

💥தோளோடு அணைத்து
நா தழுதழுக்க
‘எத்தனை காலமாச்சு பாத்து’ –
என்று ஏங்காதீர்

💥இவையெதுவும் இல்லாமலும்
ஒரு மனசு அறியாதா
தன்னைப் போல் இன்னொன்றை.

-ரமேஷ் வைத்யா

#*உயரங்களின் ரசிகன் நான்*

💥என் சுவடுகளில் மிதிபடும்
முகடுகளில் எனக்கொரு
பரவசம்

💥சங்கீதத்தில் மேல் சட்ஜமம்
சாலையில் டாப்கியர்
காகிதங்களில் காற்றாடி

மலையென்றால் சிகரம்
வீடென்றால் மாடி
கோயிலென்றால் எனக்கு கோபுரம்தான்

💥அடித்தளங்கள் அவசியமானாலும்
ஈர்த்ததில்லை என்னை அவை

💥உயரங்களின் ரசிகன் நான்

நடப்பதை காட்டிலும் பறக்கவே பிரியம்
புதைவதை காட்டிலும் எரிதல் விருப்பம்
கவிஞன் என்கிற கித்தாய்ப்பு பிடிக்கும்

💥க்ளார்க்காய் இருக்கிறேன்
வயிற்றின் அபத்தம்..

-ரமேஷ் வைத்யா

1 comment: