*திண்டுக்கல்லில் 6⃣ வது புத்தக திருவிழா*
_நவம்பர் 30 முதல் டிசம்பர் 10 வரை_
*நூல் அறிமுகம்:* 3⃣2⃣
*நூலின் பெயர்:* குடகு
*நூல் ஆசிரியர் :* ஏ கே செட்டியார்.
*உங்களுக்கு ஏ கே செட்டியாரை தெரியுமா ?*
*அ. கருப்பண செட்டியார் என்பது பெயர்..*
*உலகம் சுற்றிய முதல் தமிழர்..*
*காந்தி ஆவணப்படத்தை உலகிலேயே முதலில் தமிழில் எடுத்தவர்..*
*( அதை நாம் தொலைத்துவிட்டோம் என்பது தனி கதை )*
*தன் பயண நூல்களால் தமிழ் இலக்கியத்தில் திருப்புமுனை உருவாக்கியவர்...*
*இவரின் சிறந்த படைப்புகளில் ஒன்று " குடகு "..*
*காவிரி தோன்றும் இடம் குடகு..*
*இந்த குடகு மலையின் கதையே இந்த நூல்..*
*12 தலைப்புகள்...*
*குடகு தலைப்பில் மலை பற்றியும்,*
*தண்ணீரும் காவிரியே என்ற தலைப்பில் ஊற்றாக தோன்றும் காவிரி நீர் பற்றியும்,*
*குடகு மலை ஆளுமைகளான பல்லசண்ட அப்பையா, ஜெனரல் கரியப்பா பற்றியும்,*
*குடகர் என்ற தலைப்பில் அங்குள்ள மக்கள் பற்றியும்,*
*காப்பி தலைப்பில் குடகின் பெருமையின் உச்சமான காபி பற்றியும்,*
*எழுதுகிறார் ஏகே செட்டியார்..*
*குடகு மக்களின் நிலம், மொழி, வணிகம், சடங்குகள், விழாக்கள், இசை, நடனம், விவசாயம், அரசியல் போன்ற அம்சங்களை அழகிய காட்சிகளாக பதிவு செய்துள்ளார்..*
*குடகு நில மக்களின் பெருமைகளும் மதிப்பாய்ந்த மனித மனமும் தனித்த அடையாளங்களாக இந்த நூல் படம்பிடிக்கிறது..*
*மிக அரிதான குறிஞ்சி நில இலக்கிய ஆவணங்களில் முக்கியமானதாக இருக்கிறது இந்த நூல்..*
*வாசியுங்கள்..*
*அவசியம் பார்க்க வேண்டிய அழகான இடம் குடகு என ஆசிரியர் குரல் ஒலிப்பதை கேட்க முடியும்..*
*பக்கம்:*159
*விலை:* ரூ 125
*வெளியீடு:*நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
_வாசிப்பை சுவாசமாக்குவோம்_
நம்பிக்கையுடன்
ஸ்ரீதர்
திண்டுக்கல் 🦋
No comments:
Post a Comment