#கற்கை_நன்றே_124
பயணித்துக் கொண்டிருக்கும் மனம் மட்டுமே ஜீவித்திருப்பது.
மனம் நீண்ட பயணங்களுக்கு வழிகாட்டி, எங்கேயாவது போய்க் கொண்டிருக்கிறாய் என்றால் மனதுக்குக் கொண்டாட்டம். நீ நகர்ந்து கொண்டிருக்கிறாய் என்பதே மனதை விரித்துப் பெரிதாக்குகிறது. ஆனால் எங்கேயும் போகாமல் அப்படியே அமர்ந்திருந்து எதையும் செய்யாமல் இருக்கும் போது மனம் வருத்தப்படுகிறது.
மனம் எப்போதும் தொடுவானம் போலவே இருக்கிறது மனிதனுக்கு.
மகிழ்ச்சியை ஒரு எதிர்கால இலக்காக மட்டும் பார்க்கும் பழக்கம் தற்போது பெருகிவிட்டது. ராசி பலன் படி அடுத்த வருடம் அருமையாக இருப்பீர்கள் என்றால் உடனே மனம் ஒப்புக் கொள்கிறது.
இப்போது செய்யும் வேலையிலிருந்து மாறிவிட்டால் சந்தோசம் ஆகிடுவேன், இப்போதிருக்கும் நிலையை விட்டுவிட்டு சென்றால் சந்தோசம் ஆடி ஆஃபரில் கிடைத்திவிடும் என எண்ணுகிறோம். இது எல்லாவற்றுக்கும் பெயர் “destination addiction” என்கிறார்கள்.அதாவது நாம் இப்ப இருக்கும் நிலையில் மகிழ்ச்சியும், திருப்தியும் சுத்தமா இல்லை என கற்பனை செய்துகொள்வது.
ஏதோ ஒரு வருங்கால நிகழ்வு நிகழ்ந்தால் தான் மகிழ்ச்சியாக இருப்போம் என நம்புவது. அது நடக்காதவரை தினமும் அதிருப்தியுடன் வாழ்நாளை கழிப்பது .கடைசியாக அது நடந்தபின் இன்னொரு நிகழ்வை எதிர்பார்த்து காத்திருக்க ஆரம்பிக்கிறது மனது. மகிழ்ச்சி வேறொரு வேலையில், வேறொரு நாட்டில், வேறொரு வீட்டில், இன்னொரு புதிய வாழ்க்கை அமைவதை பொறுத்து இல்லை இந்த வினாடி உங்கள் கையில் என்ன இருக்கோ அதை அனுபவிப்பதில் உள்ளது மகிழ்ச்சி என்பதை அறியாமல் விட்டுவிடுகிறோம் என்கிறார் நியாண்டர் செல்வன்.
எப்போதும் எதிர்காலத்தை நோக்கிய எதிர்பார்ப்பில் இப்போதைய செயலில் பூரணுத்துவம் இல்லாமல் இருப்பது.என்னுடைய திறமைக்கு இந்த வேலை சுமார்தான்.அடுத்து வ்ரும்வேலையில் மட்டும் என் திறமையை முழுமையாய் காண்பிப்பேன் என எண்ணுவது.
“Happiness is not a destination. It is a way of life.” – இந்த உண்மையை உணர்வதே தீர்வு.
ஒரு டென்னிஸ் வீராங்கனையின் விபரீத மரணத்திற்கு 'முப்பது வருடச் சிந்தனையால் கொல்லப்பட்டவர்'
என லண்டன் பத்திரிக்கையில்' ஒரு செய்தி வந்தது.அப்பெண்மணி சிறுமியாக இருந்த போது அவளது தாயார் ஒரு பல் மருத்துவரிடம் சிகிச்சை எடுக்கும் போது மாரடைப்பால் மரணமடைந்ததால், அந்த அதிர்ச்சி அவரைப் பிடித்துக் கொண்டது. அதன் பின் எந்த ஒரு பல் மருத்துவரையும் சந்திக்கவில்லை. அது தற்செயல் நிகழ்வாய் இருப்பினும் அவருக்கு பயம் இருந்தது. ஆனால் அதே போல் ஒரு முறை சந்தர்ப்பம் அவரை பல் மருத்துவரை சந்திக்க வைத்தது. அப்போது குடும்ப மருத்துவர் உடன் இருந்தும் மீண்டும் மாரடைப்பால் உயிர் இழந்தார்.முப்பது வருட சிந்தனை அவரைக் கொன்றுவிட்டது.இத்தனை வருடங்களில் நம்பிக்கையான எண்ணங்கள் இருந்திருந்தால் அவரை வாழவைத்திருக்கும். உற்சாகத்தின் மூலம் தான், நிகழ்கால எண்ணங்களின் மூலம் தான் பயத்தையும் கவலையையும் போக்க முடியும்.
எதிர்காலத்திற்கான திட்டமிடலாம் தவறில்லை. ஆனால் எதிர்காலத்தில் தான் மகிழ்ச்சி இருக்கும் என்பது மாயை. அதுநிகழ்காலத்தில் நம் காலடியில் இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.ஆசைகளுக்கு தான் எதிர்காலம் தேவை.
ஆனந்தமாக வாழ்வதற்கு நிகழ்காலம் போதும்
ஒளியினைப் பரப்புவதற்கு இரண்டு வழிகள் உள்ளன: மெழுகுவர்த்தியாக இருப்பது அல்லது அதன் ஒளியைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருப்பது என்கிறார் எடித் வார்டன்.
நிகழ்காலத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.சந்தோசங்களை பிரதிபலிப்போம்.
நற்காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment