#Reading_Marathon2025
#25RM055
Book No:95/100+
Pages:-112
கணிதத்தின் கதை
-ஆயிஷா இரா.நடராசன்
எண்களே கடவுள், கடவுளுக்கு புரியும் ஒரே மொழி கணிதம் என எண்களையும் வடிவங்களையும் பிரபஞ்சத்தை குறித்த ஆய்வுக்கு அடிப்படையாக அமைந்தது கணிதம் தான்.கணிதம் என்பது ஒரு ஏட்டுச் சுரைக்காய் என்று பலரும் சொல்ல கேட்டிருப்போம் .ஆனால் பின் நாட்களில் பொறியியலில் பொருளாதாரத்தில் என பல்வேறு துறைகளில் அதிகம் உதவியாக இருந்தது கணிதம் மட்டுமே.
கிரேக்க சொல்லான மாத மேட்டிக்கா என்பதற்கு கற்க முடிந்தது (things that are learned )என்று பொருள். அந்த வார்த்தையில் இருந்து தான் மேத்தமேடிக்ஸ் எனும் இன்றைய கணிதம் குறித்த உலகளாவிய சொல் வந்து இருக்க வேண்டும் என்கிறார்கள். இவ்வாறு ஆதி காலத்தில் இருந்து எண்கள் எவ்வாறெல்லாம் பிறந்தது வளர்ந்தது வாழ்ந்தது என்பது குறித்து வரலாற்று பதிவுகளை முதல் பகுதியில் எழுதியுள்ளார். தசம என் முறைகள் இந்தியர்கள் பயன்படுத்திய என் உருக்கள் என இந்தியாவை மையப்படுத்தி துவங்கிய கணித புயல் வடமேற்கு நோக்கி நகர்ந்து முதலில் கிரேக்கத்தில் தான் மையம் கொண்டு வீசத் துவங்கியது என்று முடிக்கிறார்கள்.
எண்களாக இருந்த கணிதம் வடிவ கணிதமாக பிறந்ததின் கதையை கிரேக்கர்கள் தத்துவ மேதைகளின் வழியே தேற்றங்கள் உருவாக்குவதில் ஈர்க்கப்பட்டு வடிவ கணிதம் பிறந்த கதைகளை சொல்லி.. அதன் பயன்பாடுகளையும் அதை எவ்வாறு எல்லாம் இருந்தது என்பதனை கால வரிசைப்படி கூறுகிறார்கள். அப்போலினஸ் பூமியின் சுற்றளவை அளந்து அறிவித்த எராஸ்டோஸ்தீனஸ் திருகு என்னும் நீர் உயர்த்தியை பரவலாக பயன்படுத்துவதன் அடிப்படையாக இருந்தது கணிதம் தான் நம்பு போல் தத்துவத்தை உருவாக்குவதற்கு ஆர்க்கிமிடிசுக்கு பயன்பட்டதும் கணிதம் தான்.
இன்னும் 212 ல் ரோம படையெடுப்பு கிரேக்கத்தின் மீது நடந்த போது ஆர் கே டி எம் எஸ் ஐ கொல்வதற்கு வீரன் ஒருவன் வந்தான் அப்போதும் கூட கணித வரையறைகளை நிறுவிட முயன்று கொண்டிருந்த ஆற்கடிமிஸ் கொஞ்சம் இரு இந்த வட்டத்தை முடித்துவிட்டு வருகிறேன் என்று மெல்லிய குரலில் கூறியதையும் கேட்காமல் இரக்கமின்றி குத்திக் கொன்றான் அவன் ஆர்க்கிமசின் பொறியியல் சார்ந்த கண்டுபிடிப்புகளை இயந்திரங்களை ரோம மக்கள் எடுத்துக் கொண்டார்கள் ஆனால் அவரது கணித பாரம்பரியத்தை அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை.
கணிதத்தில் எக்ஸ் என்பது முக்கியமான ஒரு கதாபாத்திரமாகவே வருகிறது. அதன் தோற்றமும் பயன்பாடுகளும் அது பிறந்து வந்த கதைகளையும் இந்த புத்தகத்தில் எடுத்துரைத்து உள்ளார். ஏற்கனவே மாய சதுரங்கள் உருவான கதை எண்ணிற்கும் வடிவத்திற்கும் உள்ள தொடர்புகள் அதனை கண்டறிந்த அறிஞர்கள்.. கணித சாம்ராஜ்யத்தின் கடைசி சக்கரவர்த்தியாக விளங்கிய ராமானுஜத்தின் பங்களிக்கும் ஆர்டியின் பங்களிக்கும் இந்த புத்தகத்தின் கடைசி அத்தியாயங்களில் கொடுக்கப்பட்டுள்ளன.
கணிதம் என்றாலே குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பயமும் தொல்லையும் உண்டு. ஆனால், கணிதத்தின் தோற்றம், வளர்ச்சி, உலகின் பழங்கால நாகரிகங்களில் கணிதம் எவ்வாறு பிறந்தது, எண்கள் எங்கு உருவானது, கணித நபர்கள், சமூக வளர்ச்சியில் கணிதத்தின் பங்கு போன்றவை இந்நூலில் மிக எளிமையாகவும் சுவாரசியமாகவும் விளக்கப்படுகின்றன.
பாபிலோனியர், மாயன், செவ்விந்தியர் போன்ற பழங்கால நாகரிகங்களில் ‘எண்’ பற்றிய ஆராய்ச்சி, கணிதவியல் கண்டுபிடிப்புகள் ஆகியவை கதையின் வடிவில் உரைநடை அமைப்பில் எழுதப்பட்டுள்ளன.
வரலாற்று நிகழ்வுகளையும் கணிதப் புதிர்களையும் கதைகளாக சொல்லும் இந்த நூல், கணிதம் பற்றிய பயத்தை மறக்கச் செய்து பள்ளி மாணவருக்கே தூண்டும் தளமாக அமைந்துள்ளது. மிகவும் எளிய சொற்கட்டமைப்பும், கதையின் நடைமுறையும் சிறுவர் மதிப்பீட்டில் ஏற்றவையாக அமைந்திருக்கிறது.
தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment