#Reading_Marathon2025
#25RM055
Book No:90/100+
Pages:-133
#ஒரே_எழுத்தாளர்_12மாதம்_12புத்தகங்கள்
நிழல் முற்றம்
-பெருமாள் முருகன்
திரையரங்கம் எனபது மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாய் இருந்தது. வார இறுதி, பண்டிகை நாட்கள் எதுவாய் இருந்தாலும் திரையரங்கம் தான் ஒவ்வொருவரும் செல்லும் இடமாகும். திரையரங்கில் வேலைக்கு செல்வது அல்லது திரையரங்கில் யாரேனும் ஒருவரை தெரிந்து வைத்தல் என்பது அரசாங்க அலுவலகத்தில் ஒருவரை தெரிந்து வைத்திருப்பது மாதிரி.. அவ்வளவு மதிப்பு. அதேபோல தியேட்டர் கேண்டீனில் பொருள் விற்பவரும் நம் மதிப்புக்கு உரியவரே. எல்லாரும் கூட்டமாய் சூழ்ந்திருக்கும் போது அல்ட்சியமாய் அனைவரையும் பார்த்து கடந்து விட்டு செல்வார்.
திரையரங்கையும் அதில் பணியாற்றும் வேலையாட்கள் பற்றியும் பெருமாள் முருகன் எழுதிய
நாவல் இது. தமிழில் பிரபலமான இடைவிடாத வாசகர்களைப் பெற்ற நாவல்களில் ஒன்றாகும்.
இந்த நாவல் 1970களில் சேலம்
நகரில் சிறிய சினிமா திரையரங்குப் பணியாளர்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு உள்ளவர்கள் அனைவரும் பொருளாதார பின்புலமில்லாதவர்கள்
அந்த வகையில் சக்திவேல், நடேசன், பெரியசாமி, விசுவன், பூதன்— ஆகியோர் கதையின் முக்கிய பாத்திரங்கள்.இவர்கள் தியேட்ட்ரில் முறுக்கு, சோடா போன்றவை விற்கும் அன்றாடம் காய்ச்சிகள். இவர்களின் வேலை, அனுபவம், வாழ்க்கை சூழல்களின் உலகம் தான் நாவல்.
திரையரங்கின் அன்றாட நிகழ்வுகளை கண்முன் படம் பிடித்து காட்டியிருப்பார்.
"விருத்துப்போன தன் கால்களை இழுத்துப்பார்த்தான் நீண்டு விறகுக்கட்டை போல் உயிர்ப்பித்திருந்தது" எனும் வரி.. நீண்ட நேரம் டிக்கெட் எடுக்க காத்திருந்தவனின் நிலையை சொல்கிறது.டிக்கெட் கொடுக்கப்பட்டவுடன் "வரிசை கலைக்கப்பட்ட எறும்புகளாய் கூட்டம் சிதறியது" என்றும்.. காட்சிகள் இல்லாதபோது "திரையரங்கின் சுவர்கள் ஆசுவாசமாய் மூச்சு வாங்கிக் கொண்டிருந்தன'" எனும் வரியும் திரையரங்கு குறித்த நினைவுகளை சிந்திக்க வைக்கின்றன.
நாவலின் உள்ள கதை நகர்தல் எல்லாமே கட் பன்னின்னா சக்திவேல் என்ன செய்து கொண்டிருந்தார், மேனேஜர்,சைக்கிள் ஸ்டாண்ட், சோடா கடை முதலாளி செய்யும் செய்கைகள் என சினிமா பானி எடிட்டிங் விதத்தில்.அமைந்தது சிறப்பு.அடக்கமான மொழிநடையுடனும், துல்லியமான வாசகரை உருவாக்கும் எழுத்துக்களும் இந்நாவலின் தனிச்சிறப்பு.சமூகத்தில் கடைநிலை மனிதர்களின் வாழ்வியல் அனுபவங்களை, புறக்கணிக்கப்பட்ட சிறிய மனிதர்களின் கதையை, மிக நம்பகமான மற்றும் நேரடி நயத்துடன் வெளிப்படுத்துகிறது
சொற்ப ஊதியத்துக்கு மனைவியை பிரிந்து பணி செய்யும் பணியாள், தந்தையை வெறுத்து திரையரங்க வேலைக்கு வந்த சக்திவேல், டிக்கெட்கொடுத்தது போகமீதி நேரம் தாயகட்டை, சீட்டாட்டம், ஊருக்குள் போஸ்டர் ஒட்டும் பணி,ஆட்கள் குறைவாய் இருந்தால் போய் அடுத்த காட்சிக்கு வரச் சொல்லுவது என தியேட்டர் அனுபவங்கள் கண் முன் வந்தது.
சோடா கடை முதலாளி வீட்டிற்கு பாதை அமைக்க போஸ்டர் ஒட்டும் பணியின் போது சேர்த்து அந்த வேலையை கொடுக்கிறார். ஐவரும் ஆசையாய் செல்கின்றனர். நிலத்தகராறு பங்காளிச்சண்டை நடக்கிறது.சண்டை முடிந்து நடேசன் தோளில் ஏதோ விழ அலறல்.சினிமா பாணி போல் கட்
அடுத்து சக்திவேல் தூங்கிக் கொண்டிருக்க சோடா கடைபூட்டு தியேட்டரில் உடைந்து களவு போயிருந்தது. எல்லோரையும் விசாரித்துக் கொண்டிருந்தார் சோடா கடை முதலாளி.நண்பர்களை ஒரு கட்டத்தில் இழந்த வெறுமையில் சக்திவேல் என்ன முடிவு எடுத்தான் என்பது கதை.
இந்நாவல் துப்பறியும்.கதையோ வாழ்வை புரட்டிப் போடும் நாவலோ அல்ல. திரையரங்கில் வாலிப வயதை நெருங்கியவர்கள் வாழும் வாழ்க்கை, அங்கே பிழைப்பு நடத்துபவர்களின் அனுபவங்கள் விவரிக்கப்படுகின்றன.
வெளிச்சம் குறைந்த வாழ்க்கையிலும் மனிதர்கள், சந்தோஷ நேரங்களை தங்கள் முறையில் எவ்வாறு அனுபவிக்கிறார்கள் என்ற யதார்த்தவாதம் வெளிப்படுகிறது.
நாஞ்சில் நாடன் சொல்வது போல படைப்பின் மீது தத்துவச் சாயம் பூசாமலும், அல்லது தத்துவ சாயத்தில் முக்கி எடுக்காமலும் அசலான மனிதர்களின் வாழ்வியல் அனுபவங்களை இதில் பதிவு செய்துள்ளார்
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment