#கற்கை_நன்றே_135
தலைவன் என்பவன் தன்னுடைய வழியறிந்து,
தன்வழி நடந்து, வழிகாட்டுபவனாகவும் இருப்பான்
-ஜான். சி. மேக்ஸ்வெல்
செய்திகளை இன்றியமையாமல் வலியுறுத்துவது தலைமைதுவத்தின் முக்கிய பண்பாகும்.ஒருமுறை ஐன்ஸ்டீனின் உதவியாளர், ஒரு கண்ணாடி பாத்திரத்தை கொண்டு வந்து கொண்டிருந்தார். அடிக்கடி ஐன்ஸ்டீன் பத்திரம் பத்திரம் எனக் கூறினர்.ஐயா நாந்தான் கீழே விடவில்லையே என்றார்.அதற்கு நீ பாத்திரத்தை சரியான முறையில் கொண்டுவரத்தான் எச்சரித்தேன். கீழே விழுந்தபின் எச்சரிக்கை செய்ய முடியாது அல்லவா? என்றார்.
ஒரு செய்தியை திரும்ப திரும்ப கூறுவதன் நோக்கம் அதனை சரியாக செய்ய வேண்டும் என்பதற்காகத் தான். ஒரு சிலர் தான் அந்த வேலையைச் செய்தால் எவ்வாறு நேர்த்தியாக செய்வேனோ அதேபோல்.நீயும் செய்யவேண்டும் எனும் நோக்கத்தில் ஒவ்வொரு முறையும் சொல்லிக் கொண்டே இருப்பார்.பிறர் கூறும் போது நமக்கு சற்று அலட்சியமாய் தோன்றலாம்.. நாமே நமக்கு சில வார்தைகளை கூறிக் கொண்டே இருந்தால் அதுவே சுய முன்னேற்றம்.
ஒரு பிரபல அணிக்காக விளையாடிய பேஸ்பால் வீரர் ஒருவர் ஒரு போட்டியின்போது மிகவும் களைத்துப் போய்விட்டார். வெப்பநிலை 101 டிகிரியாக இருந்தது. சுட்டெரிக்கும் மதிய வெயிலில் கடினமாக விளையாடியதில் அவர் சில கிலோ எடை குறைந்திருந்தார். போட்டியில் ஒரு சமயத்தில் அவர் மிகவும் தளர்ந்துவிட்டார்.
தான் இழந்து கொண்டிருந்த சக்தியை மீண்டும் புதுப்பித்துக் கொள்ள வழிமுறையைக் கையாண்டார். தன் தாய் கூறும் சமயப்பாடலான.."வெற்றிக்காக காத்திருப்பவர்கள் புது வலிமை கிடைக்கப் பெறுவார்கள்; கழுகுகளைப்போல தங்கள் இறக்கைகளைக் கொண்டு உயர எழுவார்கள்; அவர்கள் ஓடினாலும் களைப்படைய மாட்டார்கள்; நடந்தாலும் சோர்ந்து போக மாட்டார்கள்." இந்த அனுபவத்தைப் பெற்ற ஃபிராங்க் ஹில்லர் என்ற விளையாட்டு வீரர், விளையாட்டு மைதானத்தில் நின்று இந்த வரிகளைக் கூறும்போது, உண்மையிலேயே தன் வலிமை புதுப்பிக்கப்பட்டதாகவும், போட்டி முடிந்த பிறகும்கூடத் தான் சோர்வடையவில்லை என்றும் என்னிடம் கூறினார்.
"ஆற்றலை உற்பத்தி செய்யும் ஒரு சக்தி வாய்ந்த எண்ணத்தை நான் என் மனத்தில் விதைத்தேன்," என்று கூறி அவர் தன் உத்தியை விளக்கினார். நாம் எவ்வாறு உணர்கிறோம் என்று நாம் சிந்திக்கும் விதம், உடலளவில் நாம் உண்மையிலேயே எவ்வாறு உணர்கிறோம் என்பதில் ஒரு நிச்சயமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
நீங்கள் களைப்பாக இருப்பதாக உங்கள் மனம் கூறினால், உங்கள் உடல் இயக்கங்களும், நரம்புகளும், தசைகளும் அந்த உண்மையை ஏற்றுக் கொள்கின்றன. உங்கள் மனம் ஒரு விஷயத்தில் தீவிர ஆர்வத்துடன் இருந்தால், ஒரு நடவடிக்கையைக் காலவரையறை இன்றி உங்களால் செய்து கொண்டே இருக்க முடியும்.
பயமுறுத்தல்களால் நீங்கள் ஊக்கப்படுத்த முடியும், மேலும் பாராட்டுக்களாலும் ஊக்கப்படுத்த முடியும். ஆனால், இவ்விரண்டு வழிகளுமே தற்காலிகமானவைதான். சுயமாக ஊக்கமளித்துக் கொள்ளுதலே நிரந்தரமானது."என்கிறார் ஹோமர் ரைஸ்.
நற்காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment