#கற்கை_நன்றே_128
சில சமயங்களில் நீங்கள் வேலியின் எந்தப் பக்கத்திலிருந்து தாண்டிக் குதிக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. தாண்டி குதிப்பதுதான் முக்கியமானது. முடிவுகள் எடுக்கப்படாமல் முன்னேற்றங்கள் இல்லை
-ஜிம்ரான்
நாம் பணிபுரியம் இடத்திலோ, வீட்டிலோ ஏதேனும் ஒரு விஷயத்தில் ஆலோசனை கேட்டால் தயங்குகிறோம். எங்கே நாம் சொல்லி செயல்படுத்தி தோல்வியடைந்தால் அது நம் பிரச்சனையாகிவிடும் என அதிகம் யோசிக்கிறோம்.ஆனால் வேறு ஒருவர் ஆலோசனை கூறி அது தோல்வியடைந்தால் என்க்கு அப்பவே தெரியும் என புளகாகிதம் அடைகிறோம். உண்மையில் நம்மிடம் முடிவெடுக்கும் திறன் அதிகம் இருக்கிறது. ஆனாலும் எதுக்கு வம்பு என பின்வாங்கிவிடுகிறோம்.
தலைமைப் பொறுப்பில் இருப்பவர் முடுவெடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தே தெரியும்.அந்த முடிவுக்கு ஏற்ற தகுந்த விளக்கமும் அவரிடம் இருக்க வேண்டும்.முடிவெடுக்காமல் இருப்பதே சிறந்த முடிவு என பலரும் எண்ணுவார்கள்.எடுத்த முடிவை பிறரை திருப்தி செய்யும்படி பல நேரங்களில் அமையாது. அப்போது அடுத்த முடிவு எடுக்க தயாராய் இருக்க வேண்டும்.
ஒரு புத்தகத்தில் படித்த கருத்து இதை வழி மொழிவது போல் இருந்தது."முட்டாள்கள் தைரியமானவர்கள்,..ஏனெனில் புத்திசாலிகள் ரிஸ்க் இருக்கும் செயலை செய்யமாட்டார்கள். அவர்களுக்கு நன்றாக யோசிக்க தெரியும். அதனால் யோசித்து "பிசினஸில் இறங்கினால் பணம் லாஸ் ஆகும்...நாம வேலைக்கே போவோம்" என போய்விடுவார்கள்.
முட்டாளுக்கு அந்த ரிஸ்க்கை சமாளிக்க முட்டாள்தனமான ஐடியா ஒன்று கையில் இருக்கும். அதை வைத்துக்கொண்டு காரியத்தில் இறங்குவார். பெரும்பாலும் அந்த முட்டாள்தனமான ஐடியா ஒர்க் அவுட் ஆகாது. ஆனால் அவர் தான் முட்டாள் ஆச்சே? இன்னொன்றை முயல்வார். அது ஒர்க் அவுட் ஆகிவிடும்.
முட்டாள்களின் இந்த தைரியத்தை பார்த்துத்தான் 'Fools rush in where angels fear to tread" எனும் ஆங்கில பழமொழி பிறந்தது. அதனால் முட்டாள்கள் எப்படி வெற்றி பெறுகிறார்கள் , நாம இத்தனை புத்திசாலியா இருந்தும் ஏன் நாம ஜெயிக்கலைனு குழம்பவேண்டாம்... ரொம்ப புத்திசாலியா இருந்தால் ஜெயிக்க மாட்டாங்க. பெரிய காரியங்களை எடுத்து செய்ய கொஞ்சம் முட்டாளா, அதுவும் முரட்டு முட்டாளா இருப்பது அவசியம்.
இது எல்லாவற்றுக்கும் அல்ல.. சில்வற்றிற்குத்தான்.
சில நேரங்களில் புத்திசாலித்தனமும் ஆபத்தில் முடிகிறது.ஒரு வேடிக்கைக்கதை..
ஒரு பிராடு சாமியார்,ஒரு அரசியல் வாதி,ஒரு இயற்பியல் பேராசிரியர் என்று மூவருக்கு கில்லட்டின் இயந்திரத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்டது.
முதல்ல பூசாரி -
சாகுறதுக்குள்ளே ஏதாச்சும் சொல்ல விரும்புறியா?
நான் கும்புடுற சாமி என்னய காப்பாத்தும்.
மேடையிலே ஏத்தி லீவரை இழுத்தா கத்தி வேகமா இறங்கி கழுத்துக்கு மேலே அரையடியிலே நின்னுருச்சு.எல்லாருக்கும் ஆச்சர்யம்.
சரி!இறங்கு.பொழைச்சுப்போ!
நெக்ஸ்ட்!
அரசியல்வாதி.
சாகுறதுக்குள்ளே ஏதாச்சும் சொல்ல விரும்புறியா?
என் நாடும் என் தலைவனும் என் உசுரை காப்பாத்துவாங்க.
மேடையிலே ஏத்தி லீவரை இழுத்தா கத்தி வேகமா இறங்கி கழுத்துக்கு மேலே அரையடியிலே நின்னுருச்சு.எல்லாருக்கும் ஆச்சர்யம்.
சரி!இறங்கு.பொழைச்சுப்போ!
நெக்ஸ்ட்!
சாகுறதுக்குள்ளே ஏதாச்சும் சொல்ல விரும்புறியா?
யெஸ்!
சொல்லு?
ஏ முட்டாப் பசங்களா!அந்த கில்லட்டின் கத்தி இங்குறப்போ முடிச்சு ஒரு இடத்துல லாக் ஆகி கழுத்துக்கு மேலே அரையடியிலே நின்னுடுது.இதை பாக்க துப்பில்லே!
செக் பண்ணுங்கப்பா!
ஆமாங்க.உண்மைதான்.அவரு புத்திசாலி.
சரி செஞ்சாச்சு!
சரி!ஸ்டேஜ்ல ஏறு!
லீவரை இழு!
சக்ஸஸ்!
புத்திசாலித்தனமே சில நேரங்களில் ஆபத்து
நற்காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment