Tuesday, 8 July 2025

127


#கற்கை_நன்றே_127

அழகான பொருள் எப்போதும் நினைந்து இன்புறத்தக்கது. அதன் பொலிவு அதிகரிக்கிறது.அது ஒருபோதும் இன்மையை நோக்கிச் செல்வதில்லை
-ஜான் கீட்ஸ்

சமகாலத்தில் வாழ்ந்து வரும் மனிதர்களிடம் எது குறைந்து வருகிறது? 

நமது நடைமுறை வாழ்க்கையில்  நாளுக்கு நாள் வளர்ந்து வரும் ஒழுங்கீனங்களை கண்டு அதிர்ச்சியுறும் தன்மை மெலிந்து கொண்டே வருகிறது. ஒரே மாதிரியான சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடப்பதால், அதற்கேற்ப நாம் பழகிவிடுகிறோம். அதனால் ஒரு கட்டத்தில் shock-ஐ உணர்ந்துபார்க்கும் திறனே குறைந்து விடுகிறது.இதனை

The law of Decreasing Shock ability என்கிறார்கள்.எப்போதும் கடுகடுப்பு சக மனிதரை நேசிப்பது இன்மை, பெற்றோரை விட்டு விலகி இருத்தல் போன்றவையும் சேர்த்துக் கொள்ளலாம்.தனித்த வாழ்வு, ஊருக்கு கெஸ்ட் போல் சென்று வருவது தொடர்பின்மை போன்றவை அன்றாட பணிகளுக்கு அடிமையான நிலை தொடர்கிறது.

கணவனும் மனைவியும் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். நள்ளிரவு. ஆழமான தூக்கம். தொலைபேசி அழைப்பு வருகிறது. அவன் எடுத்துப் பேசுகிறான். மறு முனையில் தாய். பதறிப்போய் என்ன, ஏது என்று விசாரிக்கிறான். 'உன் ஞாபகம் வந்தது. பேச வேண்டும் என்று தோன்றியது' என்று அம்மா சொன்னதும் சற்றுக் கோபக் குரலில் 'அசந்து தூங்கிக்கொண்டிருக்கும்போது எழுப்பி என்னைத் தொந்தரவு செய்ய வேண்டுமா' என்று அவன் கூறுகிறான். அதற்கு அவள் 35 ஆண்டுகளுக்கு முன்பு இதே நேரத்தில் நீ என்னைத் தொந்தரவு செய்தாய். பிறந்த நாள் வாழ்த்துக்கள்' என்று கூறி வைக்கிறாள். அவன் முகம் முழுவதும் பரவசத்துடன் அக்குறும்படம் முடிகிறது.தன் தவறை உணர்ந்தவன் அன்று இரவு முழுவதும் தூங்கியிருக்க மாட்டான். முன் முடிவோடு எதையும் அணுகவோ யூகிக்கவோ கூடாது என அப்படம் உணர்த்துகிறது.

நமது சின்ன சின்ன செயல்கள் நேர்மறையானவையாய் இருக்கட்டும். அதனால் நாம் நம்மையும் மற்றவர்களையும் மாற்றுவதில் வெற்றியடைவோம். நமது இலக்கை எளிதாக அடைவோம்.

உதாரணமாக, மூன்று நண்பர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் அவர்களை தன் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க அழைத்திருந்தார். அங்கிருந்த சூழல், அழகான வீடு, கட்டிடத்தைப் பார்த்து இரண்டாமவர் முதல் நண்பரிடம் சொன்னார்.

'இவ்வளவு அழகான வீட்டை எப்படி கட்டினீர்கள்?

முதலாமவர் பதில் சொன்னார் - 'நான் கட்டவில்லை. என் மூத்த சகோதரர் கட்டியிருக்கிறார். அவர் இந்த வீட்டை அன்பளிப்பாகக் கொடுத்துள்ளார். '

இரண்டாவது நண்பர் ஆச்சரியப்பட்டு சொன்னார். 'அடடா, என்னிடமும் இதுபோன்ற வீடு இருந்தால்!'

அப்போது முதல் நண்பர் புரிய வைத்தார் 'அப்படி சொல்லாதே, குறைவானதில் ஏன் மகிழ்ச்சி அடைகிறாய்? இப்படி சொல், அடடா எனக்கு இப்படி ஒரு சகோதரன் இல்லையே என்று.

அப்போது அவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த மூன்றாம் நண்பர் இப்படி சொன்னார். 'அப்படிக்கூட சொல்லாதே, அடடா, நான் அப்படிப்பட்ட ஒரு சகோதரனாய் இருக்கக் கூடாதா?'

மாற்றம் தன்னிலிருந்து துவங்காமல் உலகம் மாறும் எனக் காத்திருந்தால் முடிவின்றி காத்திருப்போம் எந்த பயனுமின்றி..

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment