#Reading_Marathon2025
#25RM055
Book No:88/100+
Pages:-342
ஜெயலலிதா மனமும் மாயையும்
-வாஸந்தி
பல்வேறு மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு சுவாரசியமானது.வாஸந்தி அவர்கள் எழுதிய இப்புத்தகம் அப்போதே பரபரப்பாய் விற்கப்பட்டது.புத்தகம் ஜெ வின் ஆரம்ப கால வாழ்க்கை முதல் அரசியல் வாழ்வு வரை சுவாரஸ்யமாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஜெ வின் இளமைக்கால நண்பரின் பார்வைகள், பேட்டிகள், அவரின் சொந்த வாழ்க்கை போன்றவை சுவாரஸ்யமாய் கூறப்பட்டுள்ளது.
ஜெவின்ன் தந்தை வழித் தாத்தா டாக்டர் ரங்காச்சாரி மைசூர் மகாராஜாவின் நெருக்கமான நண்பரும் மருத்துவரும் கூட. கண்டிப்புக்கு பேர் போனவர். ஆனால் தன் மகன் ஜெயராமன் தந்தை பெயரை காப்பாற்றாமல் இருந்ததால் மனமுடைந்து ஒரு நாள் தாத்தா இறந்தார். அதன் பிறகு ஜெய விலாஸ் நிலை குலைந்தது. அவருக்கு இரு பிள்ளைகள் பப்பு எனும் ஜெயக்குமாரும் அம்மு என்ற ஜெயலலிதாவும் இருந்தனர்.
தன் அப்பா ஜெயராமின் மறைவுக்கு பின் குடும்பம் எதிர்காலம் பெரிய கேள்விக்குறியாகிறது.தன் அம்மாவின் தங்கை அம்புஜா விமான பணி பெண்ணாக தன் வாழ்க்கையை துவங்கி சினிமா நடிகை ஆகிறார். அதன்பிறகு அம்முவின் அம்மாவான வேதாவும் சந்தியாவாக மாறி திரைப்பட நடிகையாக மாறிவிடுகிறார். கணவருடைய ஈமக்கிரியை முடிந்தவுடன் தன் இரண்டு பிள்ளைகளுடன் பெங்களூருவுக்குப் பயணமானார்.
இவ்வாறு செல்லும் வாழ்க்கையில் அம்மாவுடன் படப்பிடிப்புக்கு செல்லும் அம்மு மெட்ரிகுலேஷன் பரிட்சை முடிந்த பின்
வேண்டுகோளுக்கிணங்க விடுமுறை நாளில் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்து முடிக்கிறார். அதன் பிறகு கல்லூரி செல்ல விண்ணப்பித்து காத்திருக்கும் போது தான் வெண்ணிறஆடை பட வாய்ப்பு வருகிறது.அவருக்கு கூட்டம் என்றால் பிடிக்காது யாரும் நெருங்கி வந்து பேசுவதும் பிடிக்காது. அரசியல்வாதி ஆனபின் மிகவும் ஆச்சரியப்பட்டவர்கள் அவரின் நண்பர்கள் தான். ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்பதுதான் அவர்களின் விருப்பமாக இருந்தது ஆனால் காலம் மாற்றி அமைத்து விட்டது .
1984 ஆம் ஆண்டு இறுதியில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் சுதாங்கன் ஜெ விடம் யார் உங்களுடைய பர்சனல் எதிரி? ஆர்.எம்.வியா, கருணாநிதியா? என்று கேட்டதற்கு கருணாநிதி என்னுடைய அரசியல் எதிரி ஆர்.எம்.வி எனது பர்சனல் எதிரி என்றார். அதற்கான காரணத்தையும் அந்த பேட்டியில் சொல்லி இருப்பார் விரிவாக. சிவாஜிக்கும் ஜே வுககும்
இடையே
எம்ஜிஆர் உடல்நலக்குறைவு காரணமாக வெளிநாட்டுக்குச் சென்ற போதும், திரும்பி வந்த போதும் சரி.. அரசியல் நிகழ்வுகளில் ஜெ எதிர் கொண்ட பிரச்சனைகளையும், அதனை சமாளித்த விதங்களையும் தக்க எடுத்துக்காட்டுகளுடன் விவரமாக விளக்கியிருக்கிறார்கள். புரட்சித் தலைவரின் இறப்புக்கு பின் மார்ச் 25 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக வரலாற்றில் முக்கியமான விளைவை அன்று ஏற்படுத்தியது அன்று எழுந்த களேபரத்தில் தான் இன்னும் அரசியலில் தீவிரமாய் ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது.
1990 க்கு பிறகான அரசியல் பிரவேசம் முதலமைச்சர் பதவியும் இரண்டாம் பாகத்தில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன. சசிகலா நட்பு மற்றும் தனது முன்னாள் தோழிகளான ஸ்ரீமதி, சாந்தி புலானி ஆகியோரை தொடர் பெற்ற நிலைக்கு சென்றது குறித்தும் இதில் அலசி உள்ளார். பத்திரிக்கையாளர் சோலை, பிலிம் நியூஸ் ஆனந்தன் ஆகியோர்களின் பேட்டிகளும் இடம்பெற்றுள்ளன. அதன் பிறகு நடந்த தேர்தலில் கட்சியின் வெற்றிகளும் தோல்விகளும் வரிசையாக சொல்லப்பட்டுள்ளன.
வீரப்பன் வீழ்த்தியது , ஊழல் வழக்குகள்,சுனாமி பேரலை உருவாக்கிய அதிர்வு, ஒவ்வொரு தேர்தலிலும் ஏற்பட்ட கூட்டணி கணக்குகள், அப்போது நடந்த அரசியல் நிகழ்வுகள் ஆகியவை அனைத்தும் மிக சுவாரசியமாக கடந்த காலத்தை திரும்பிப் பார்க்கும் படி ஒவ்வொரு கட்டுரைகளும் அமைந்துள்ளன. அவரின் இறப்பு வரை இந்த புத்தகம் ஒவ்வொரு அத்தியாயங்களிலும் பதிவு செய்துள்ளது. தெரிந்த தகவல்களை நினைவூட்டியதும் தெரியாத சம்பவங்களை சொல்லி இருப்பதும் சிறப்பாக அமைந்தது.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment