Sunday, 6 July 2025

125


#கற்கை_நன்றே_125

மிகச் சிறந்த கேள்வி எது?

தன் மனசாட்சியை நோக்கி ஒருவர் கேட்டுக் கொள்வது

"எந்த ஒரு கருத்தையும் ஒன்றிரண்டு வரிகளுக்கு மேல் உள்வாங்கிக்கொள்ள இணையத்தில் வாசிப்பவர்களால் முடிவதில்லை.எதை எப்படி விரிவாகச் சொன்னாலும் அதிலிருந்து ஒற்றை வரியை உருவி அதை மட்டும் புரிந்துகொள்வார்கள்.

மிகப்பெரும்பாலும் இணையவாசகர்கள் நாலைந்து பத்திகளுக்கு மேல் வாசிக்கமாட்டாங்க (குறிப்பா கூகுளில் search பன்னிய பிறகு கீழே பேஜ் கொடுத்திருப்பாங்க.அதில முதல் பேஜ்ஜை கூட தாண்டமாட்டாங்க)

எப்போதும் மொழிநடை அரட்டைபோல் இருக்க வேண்டும். துண்டு துண்டாகச் சொல்லப்பட்டிருக்க வேண்டும். அதாவது கொஞ்சம் கூட தீவிரமோ கனமோ இருக்கக்கூடாது. அவர்களுக்கு தெரிந்த அரட்டைப்போல் இருக்க வேண்டும் என்பார் ஜெயமோகன்.மேலும் அதில்  அறிதல் தெரிதல் குறித்த இலக்கணம் பின்வருமாறு ஜெமோ கூறியிருப்பார்..

அறிதல்-தெரிதல்

தெரிந்துகொள்ளுதல் என்பது எப்போதும் ஒரு துண்டு அறிவைத்தான்.அறிதல் என்பது முழு அறிவை.தெரிந்துகொள்ளும்போது சலிப்பும் சோர்வும் உண்டு. கல்விக்கூட வகுப்புகள் போல. அறிதல் அவ்வாறில்லை. மனித வாழ்க்கையின் உச்சகட்ட இன்பம் அறிதல்.

தெரிந்துகொள்ளுதல் நம் நினைவை நிரப்புகிறது.அறிதல் ஆளுமையை மாற்றியமைக்கிறது.நாம் வளர்வதை எப்படி உணர்வதில்லையோ அதுபோல்தான் அறிதலையும். இருபது வயதில் உங்களுக்கு உறவுகளைப்பற்றி என்ன எண்ணம் இருந்தது.இப்போது என்ன இருக்கிறது என்று மட்டும் பாருங்கள்.ஒரு பெரிய மாறுதல்.

அந்த அறிதல் கிணற்றிலிருந்து நீர் ஊறி நிறைவதுபோல.அந்த அறிதல் ஒரு விதை மரமாவது போல.அவ்விதை விழுந்த கணம்தான் அறிதலின் கணம்.

தெரிந்துகொள்ள நூல் பல உள்ளன.கோழி வளர்ப்பது எப்படி, லெபனானின் பொருளாதாரம், தெரிந்துகொள்ளலாம்.ஆனால் அறிதலின் கணங்களை சாத்தியமாக்குகின்றன.

சிலர் அசட்டுதனமாக எல்லாத்தகவல்களும் இணையத்தில் உள்ளன.புத்தகம் எதற்கு என்பார்கள்.இணையம் வெறும் தகவல் வெளி. அந்த தகவல்களை நாம் அறிதலாக ஆக்காவிட்டால் பயனில்லை. முட்டாள்தனமான தகவல் மூட்டையாக ஆக்கும்.

"அசோகமித்ரனின் திருப்பம் என்ற சிறுகதை.மல்லையா கிராமத்து இளைஞன்.ட்ரைவிங் கத்துக்க சென்னை வருகிறான்.சரியாக பிடிபடவில்லை.வெறுத்துப்போகிறான். முதலாளி திட்டுகிறார். ஒருகனம் கன்னா பின்னாவென்று ஓடி,மல்லையா அவனையறியாமல் அவன் கைக்கு கார் பழகிவிட்டது தெரிந்துவிட்டது.ஒவ்வொரு முறையும் கியர் சரியாக விழுகிறது.அவ்வளவு சின்ன விஷயம் அது என அவனுக்கு தெரிந்து ஆச்சரியமாகவும்.உற்சாகமாகவும் இருக்கிறது.பரவசத்தை தொட்டுவிட்டான்.இதுவே அறிதலின் கணம்.

வேட்டைநாய் இறைச்சியை கண்டுகொள்வதுபோல, ஞானத்தை கண்டுகொள்ள வேண்டும்.அறிதல் என்பது ஒரு மாயக்கணத்தில் நிகழ்கிறது.அதன் சாத்தியங்கள் எல்லையே இல்லாதவை.சட்டென்று நாம் மலர்ந்துவிடுகிறோம்.சட்டென்று தெளிவாகிவிடுகிறது.அது அறிபடுபொருளும் அறிபவனும் ஒன்றாக ஆகும் கணம்.அந்தக் கணத்தில் அறிவு நாமே ஆகிவிடுகிறது.அதைத்தான் நாம் மெய்மறத்தல் என்கிறோம்.

"தெரிந்து கொள்ளும் விஷயங்களில் நமக்குப் பயனற்றவை உள்ளன. ஆனால் அறிந்துகொள்ளும் விஷயங்களில் பயனற்றவையே இல்லை.

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment