#Reading_Marathon2025
#25RM055
Book No:84/100+
Pages:-163
நீங்கள் நினைக்கின்ற அனைத்தையும் நம்பிவிடாதீர்கள்
-ஜோசப் நுயென்
ஒருமுறை சிந்தித்தால் சிந்தனை
பலமுறை ஒரே விஷயத்தை சிந்திப்பதை குழப்பம்.என்கிறார்கள். இந்த ஓயாத சிந்தனை எப்படி நம் எண்ணங்களை வாழ்வை பாதிக்கிறது என்பதுதான் இப்புத்தகம்.நடைமுறை கார்ப்ரேட் வாழ்வில் எந்த சிந்தனையும் அளவாக வைத்து மன அழுத்தம் இன்றி வாழ் இப்புத்தகம் சொல்கிறது.
சில சமயம் துன்பம் என்பது நம்மளுடைய விருப்பத்தேர்வாக அமைகிறது. தவிர்க்கக் கூடிய வழியாக இருந்தாலும் அதனை சிந்திப்பதன் மூலம் விரும்பி வேண்டி ஏற்றுக் கொள்கிறோம். அந்த சிந்தனைக்கு எதிர்வினை ஆற்றும் போது துன்பம் இன்னும் பல மடங்கு கூடுகிறது .புத்தமதம் சொல்கிறது முதல் அம்பு உடல் ரீதியான காயத்தை விளைவிக்க வல்லது.. அதிக வலி ஏற்படுத்தக் கூடியது.ஆனால் இரண்டாவது அம்பு என்பது இன்னும் அதிக வலி ஏற்படுத்தக் கூடியது. முதல் அம்பை நாம் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் இரண்டாவது அம்பை கட்டுப்படுத்தும் ஆற்றல் நம்மிடம் தான் இருக்கிறது என்று புத்தர் கூறுவதை மேற்கோள் காட்டி.. துன்புறுதல் துன்புறாமல் இருத்தல் ஆகிய இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆலோசனை கூறுகிறார்.
நாம் எதார்த்த உலகை விட்டு வெளியே வந்து வெகு நாட்கள் ஆகிறது .மாறாக நாம் சிந்தனை உலகில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பார் சிட்னி பாங்க்ஸ். எண்ணங்களின் ஊடாகத்தான் எதார்த்தங்களை வழிந்து உருவாக்கிக் கொண்டு வருகிறோம். நம்முடைய சொந்த கண்ணோட்டத்தில் ஒவ்வொரு விஷயங்களையும் பார்ப்பதால் தான் உண்மை நிலை என்னவென்று நாம் தெரிந்து கொள்ள முயல்வதில்லை. உதாரணத்திற்கு பணம் என்பது ஒருவருக்கு நேரமாக இருக்கலாம், மாறாக ஒருவருக்கு சுதந்திரமாக இருக்கலாம் .100 பேரிடமும் ஒரு விஷயத்தைப் பற்றிய 100 கண்ணோட்டங்கள் இருக்கும் .பிறர் ஏன் நம் கண்ணோட்டத்திற்கு பொருந்தவில்லை என்று போராடுகிறோம். அதனை தவிர்க்க வேண்டும் எதிர்மறை கற்பனைகளை அறவே நிறுத்த வேண்டும் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
எண்ணங்களுக்கும் சிந்தித்தல் முறைக்கும் உள்ள வேறுபாடுகளை கூறும் போது எண்ணங்கள் ஆற்றல் மிக்கதாக மனரீதியான எண்ணங்களை எந்த உதவியும் இல்லாமல் எண்ணங்களின் உதவி இல்லாமல் நாம் அனுபவமாக மாற்ற முடியாது எண்ணுவதற்கு நாம் பெரிய முயற்சி எதுவும் எடுக்கத் தேவையில்லை அது இயல்பாகவே தோன்றும் ஆனால் சிந்தித்தால் என்பது அப்படி அலல அதற்கு ஏராளமான ஆற்றல் முயற்சி மன உறுதி போன்றவை தேவைப்படுகின்ற
நம்முடைய மனதில் நம்முடைய எண்ணங்களோடு செயல் தொடுப்புடன் உறவாடுவது தான் சிந்தித்தல் உங்களுடைய மனதில் உதிக்கின்ற அனைத்து எண்ணங்களோடும் நீங்கள் உறவாட வேண்டிய தேவையில்லை உறவாடுகின்ற போது அது சிந்தித்தலாக மாறுகிறது
உதாரணத்திற்கு உங்களுடைய மாத வருமானம் என்ன என்று கேட்டால் ஒரு நொடியில் நீங்கள் சொல்லிவிடலாம். அதனை ஐம்பதால் பெருக்குங்கள் என்று சொன்னவுடன் மனது உடனே பெருக்கிக் காட்டுகிறது. உடனே அந்த தொகை குறித்து நாம் சிந்திக்க ஆரம்பிக்கிறோம். என்னவென்றால் அந்த பெரிய தொகையை நம்மால் ஒருபோதும் சம்பாதிக்க முடியாது. குடும்ப வருமானம் அவ்வளவு இல்லையே என்ற ஏக்கம் முதலில் தோன்றுகிறது. அந்த பணத்தை நாம் அடைவது பேராசை என்று ஒவ்வொரு எண்ணமாக அடுத்தடுத்து வந்து கொண்டு இருக்கும். இதனைத் தான் அவர் சிந்தனை என்கிறார். மொத்தத்தில் எண்ணங்கள் படைப்பாற்றல் மிக்கவை. சிந்தனைகள் அழிவுபூர்வமானவை .சிந்திக்காமல் இருந்தால் எதிர்மறை உணர்வுகளை எடைபோடுதல்களையும் குறைக்க முடியும் என்கிறார். ஆசிரியர் கூறியது எல்லாவற்றுக்கும் அல்ல, ஒரு சில எதிர்மறை சிந்தனைகளுக்கானது என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
சிந்திக்காமல் நம்மால் இருக்க முடியாது. ஆனால் சிந்தனைக்குள் மாட்டிக் கொள்ளாமல் இருக்கும் நிலையை நாம் எடுக்க வேண்டும் ." ஒரு நீர் நிரம்பியுள்ள கோப்பையில் தண்ணீர் இருக்கிறது. அது அசுத்தமாக இருக்கிறது அதனை சுத்தப்படுத்த என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டவுடன் நாம் நீரை வடிகட்டலாம், கொதிக்க வைக்கலாம் என்று வெவ்வேறு யோசனைகளை பரிந்துரைப்போம். ஆனால் அந்த நீரினை அப்படியே வைத்திருந்தால் அதில் உள்ள கசடுகள் தானாகவே படிந்து சுத்தம் ஆகிவிடும் என்பதை பலர் அறிந்து இருப்பார்கள். ஆனால் அதனை செய்ய மாட்டார்கள். நம் மனதும் அப்படித்தான். ஒரு எண்ணம் தோன்றுகின்ற போது அதை ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டால் அதுவே தானாக அடங்கி விடும். நம் மனமும் சிந்திக்க வேண்டிய அவசியத்தில் இருந்து விடுபட்டு விடும் என்ற எளிய எடுத்துக்காட்டு மூலம் நமக்கு கூறுகிறார்.
போர்களில் ஈடுபடுகிற வீரர்கள் மற்றும் விளையாட்டில் கலந்து கொண்டு ஓடும் வீரர்கள் தங்களுடைய எண்ணங்களை தேவையற்ற சிந்தனையில் ஈடுபடுத்த மாட்டார்கள். கவனத்தை செலுத்த மாட்டார்கள். அவர்களுடைய மனதில் எந்தவித எண்ணங்களும் இல்லாமல் தூய நிலையில் இருப்பார்கள். இதனை சிந்தனையற்ற நிலை என்று கூறுகிறார்கள். ஜப்பானியர்கள் இதனை முஷின் என்று அழைக்கின்றனர். எண்ணங்கள் கோபம் பயம் அகங்காரம் போன்றவற்றிலிருந்து மனம் விடுபட்டு இருக்கின்ற நிலை தான் முஷின்.
ஒரு பியானோவில் 88 விசை பலகைகள் இருக்கின்றன. அதனை பார்க்கும் போது ஒன்று போல் தோன்றினாலும் அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசையை கொண்டு வரும். ஒவ்வொன்றும் ஒத்திசைவாய் இருக்காது. ஆனால் அதில் இருக்கின்ற ஒவ்வொரு விசையும் ஒவ்வொரு இசையை நமக்கு கொடுத்து சந்தோசப்படுத்துகிறது. வாழ்வும் அதுபோல பல்வேறு மனிதர்களை நாம் சந்திக்கும் போது அவர்கள் அனைவரும் நம்முடன் ஒத்திசைவாக இருக்க மாட்டார்கள். ஆனால் அவர்களுக்குள் இருக்கும் ஒரு உண்மை நிலையை அறிந்து கொள்கின்ற போது மெய்யான சந்தோஷத்தை நாம் அடைய முடியும்.
நம் மனதில் இருக்கின்ற எண்ணங்கள் உண்மை தகவல்கள் அல்ல. சில நேரங்களில் மனம் கற்பனையான ஒன்றைக் கூட நமக்கு சொல்லும். அப்போது அதனை புறந்தள்ளி எதிர்மறை உணர்ச்சிகளை உண்டாக்காமல், அதனோடு வினை புரியாமல், உண்மை குறித்த நம்மளுடைய புரிதலை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். தெளிவு நம்முடைய மனதின இயல்பான நிலை. சில நேரங்களில் நாம் சிந்திக்கின்ற போது அது குழப்பம் அடைகிறது. யாரிடமும் நமக்கு பிரச்சனை இல்லை. ஆனால் நம்முடைய சிந்தனை சில நேரங்களில் பிறர் மீதான கோபத்தை ஏற்படுத்துகிறது. நேர்மறையான சிந்தனைகளையும் சிந்தனைகளின் வழியே நமக்கு கிடைக்கின்ற மகிழ்ச்சியையும் அன்பையும் நாம் மீட்டெடுக்கும் போது மற்ற மனிதர்களிடமும் அந்த அன்பையும் மகிழ்ச்சியும் நாம் பாரபட்சம் இன்றி கொடுப்போம்
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment